கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது, தமிழகத்திற்கு பொருந்தாது என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சென்னையை சேர்ந்த 10 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: நாங்கள்அனைவரும் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2008- & 2009ம் ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்தோம். இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஒரு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது தமிழகத்திற்கு பொருந்தாது. அது செல்லாது என்று கூறப்பட்டு இருந்தது. இது தவறானது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பே, நாங்கள் ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்துவிட்டோம். எனவே, அரசாணையை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ராஜா விசாரித்து, அரசாணை கடந்த 2009ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. எனவே அதற்கு முந்திய ஆண்டு மனுதாரர்கள் கர்நாடகாவில் படித்து முடித்து விட்டார்கள். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அரசாணையை முன் தேதியிட்டு அமுல்படுத்துவது தவறானது. மனுதாரர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் பாடதிட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது தமிழகத்திற்கு பொருந்தாது என்று அரசு ஆணை வெளியிட்டது சரியானது தான். இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அரசாணை செல்லும். அதை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் ஆர்.சுரேஷ்குமார், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோமதிநாயகம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக