லேபிள்கள்

5.6.14

ஏழை குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு மறுக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து : ஐகோர்ட்டில் வழக்கு

மதுரையை சேர்ந்த ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட
ஒதுக்கீடு வழங்கவேண்டும். ஆனால், சில தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுவதில்லை. மாறாக பள்ளியில் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கின்றனர். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு நடத்துவதைப் போல, இதிலும் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும். 25% இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கலந்தாய்வு மூலம் மாணவர்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக