லேபிள்கள்

4.6.14

பத்தாம் வகுப்பு 'தத்கல்' அறிவிப்பு 6,7ம் தேதிகளில் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வி அடைந்த, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விரைவில் நடக்க உள்ள, உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் மட்டும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, வரும், 6,7ம் தேதிகளில், நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


அப்போது, தேர்வு கட்டணம், 125 ரூபாய், சிறப்பு கட்டணம், 500 ரூபாய், பதிவு கட்டணம், 50 ரூபாய் என, 675 ரூபாயை, பணமாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் செலுத்த வேண்டும். 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்து கொள்ளும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக