லேபிள்கள்

14.6.14

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ‌w‌w‌w.‌t‌n‌d‌g‌e.‌i‌n என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 18 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக