லேபிள்கள்

9.6.14

பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட்படிப்பு தொடங்குவதற்காகதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் (என்.சி.டி..) தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்துஅது குறித்தசெய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானதுஇதைத் தொடர்ந்து,தற்போது எம்.எட்படிப்பு குறித்த பிரமாணப் பத்திர தகவல் இணையதளத்தில்இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது எம்.எட்சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிண்ணப்ப விநியோகமும் நடந்து வருகிறது.

           இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டதுஇதில்எஸ்.சுதர்சன் என்பவர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் கல்வியியல் துறையில் முழுநேரப் பேராசிரியராக 2014பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

           இவர் ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்வியியல்கல்லூரியில் புகார் ஒன்றில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்டவர்நிலைமைஇவ்வாறிருக்க பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பல்கலைக்கழகமுழுநேரப் பேராசிரியராக எஸ்.சுதர்சன் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்என்றும்விளம்பரம் செய்யாமல் எப்போது தேர்வு செய்யப்பட்டார் என்றும்,பல்கலைக்கழக ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.

          பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆசிரியர் நியமிக்கப்படும்போது,பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்விதிமுறைகளின்படி நியமிக்கப்பட வேண்டும்.எனவே முழுநேரப் பேராசிரியர்நியமனத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

         இந்த நியமனம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எந்தவிவரமும் தெரியாத நிலையில்தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில்பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குறித்தபிரமாணப் பத்திரம் போலியானதாஎன்ற கேள்வி எழுந்துள்ளது.

           இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது.இதனிடையே பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து (ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்ள்க்ங்ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ம்ங்க்.ல்க்ச்எம்.எட்படிப்பு தொடங்கதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரதகவல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.அரசு விசாரிக்க வேண்டும்இதுகுறித்து,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பிச்சாண்டிகூறுகையில்எம்.எட்படிப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரதகவல் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதில்இருந்தேஇவ்விஷயத்தில் ஏதோ தவறு உள்ளது தெரியவருகிறது.

         இவ்விஷயம் குறித்து ஆளுநரும்தமிழக அரசும் உரியவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்தவறு நடந்திருந்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கிரிமினல் நடவடிக்கை தேவை

           இதுதொடர்பாகஅண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் .பாலகுருசாமி கூறுகையில்பல்கலைக்கழகங்களே தவறுசெய்யும்போது இணைப்புக் கல்லூரிகள் எப்படி நியாயமாக செயல்படும் என்றகேள்வி எழுகிறதுபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்படிப்பு தொடங்கதாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரம் குறித்து முழுமையாகத்தெரியவில்லை.

          அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம்உண்மையானதாபோலியானதாமுறைகேடுகள் எதுவும் நடந்திருக்கிறதாஎன்பது குறித்தும் தெரியவில்லைஒரு பல்கலைக்கழகமே தவறு செய்வதுமன்னிக்க முடியாத செயலாகும்இதில் ஏதாவது தவறு நடந்திருப்பதுதெரியவந்தால் குறிப்பிட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்க வேண்டும்அவர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக