லேபிள்கள்

11.6.14

ஒரே மாணவி ஒரே ஆசிரியை: மானாமதுரை பள்ளியின் நிலை

மானாமதுரை அருகே செய்யாலூர் பள்ளிக்கு மாணவர்கள் வருகை இல்லாததால், ஒரு மாணவிக்காக, ஆசிரியர் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை, மானாமதுரை ஒன்றியம், செய்யாலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, கடந்த ஆண்டில், 5 மற்றும் 3 ம் வகுப்பில் 2 மாணவிகள் மட்டும் படித்தனர். அதில், ஒரு மாணவி 6 ம் வகுப்பிற்காக, மாற்று பள்ளிக்கு சென்றுவிட்டார்.இதனால், இக்கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பில், பிரியா என்ற மாணவி மட்டுமே படித்து வருகிறார். இந்த, ஒரு மாணவிக்காக, பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தினமும் பள்ளியை திறந்து, கற்பித்து வருகிறார். மாணவர், சேர்க்கைக்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தாலும், பயனில்லாத நிலையில், இங்கு ஒரு மாணவி மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பிரியாவின் பெற்றோரும், அம்மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற திட்டமிட்டனர். இதற்கு தலைமை ஆசிரியை முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா கூறுகையில்,"கடந்த ஆண்டு இரு மாணவிகள் படித்தனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பிழைப்பிற்காக வெளியூர் செல்கின்றனர். இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. மாணவர் சேர்க்கைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.மானாமதுரை தொடக்ககல்வி அலுவலர் நாகலட்சுமி கூறுகையில், "மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இங்குள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆசைப்படுவதால், வருகை குறைந்துவிட்டது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக