லேபிள்கள்

12.6.14

1.73 லட்சம் மாணவர்களுக்கு பி.இ., 'ரேண்டம்' எண் வெளியீடு: விண்ணப்பித்தவர்களில் மாணவியர் எண்ணிக்கை குறைவு

பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள, 1.73 லட்சம் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை, நேற்று, 'ரேண்டம்' எண்ணை வெளியிட்டது. 1.73 லட்சம் பேரில், மாணவர்கள், 1 லட்சம் பேர்; மாணவியரில், 66 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

'ரேண்டம்' எண்:

மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் கட்டமாக, விண்ணப்பித்த, 1.73 லட்சம் மாணவர்களுக்கும், நேற்று, 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், 'ரேண்டம்' எண்ணை வெளியிட்டார்.


இது குறித்து, பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், 10 இலக்க எண்கள் கொண்ட, 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டுள்ளது. 'கட் - ஆப்' மதிப்பெண், கணிதம், இயற்பியல் மதிப்பெண், நான்காவது பாட மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய அனைத்திலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும். எத்தனை மாணவர்களுக்கு, 'ரேண்டம்' எண் பயன்படுத்த வேண்டியது ஏற்படும் என்பது, 'ரேங்க்' பட்டியல் வெளியாகும், வரும், 16ம் தேதி தான் தெரியும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கையும், அன்று தான் தெரியும். மாணவர்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் (தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத), விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தங்களின், 'ரேண்டம்' எண்ணை பார்க்கலாம். 400க்கும் அதிகமான மாணவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவற்றில், ஒரு விண்ணப்பம் மட்டும் ஏற்கப்படும். கலந்தாய்வில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார். நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை, முதன்மை செயலர், ஹேமந்த்குமார் சின்கா, பல்கலை துணைவேந்தர், ராஜாராம், பதிவாளர், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

92,731 பேர்...:


பி.இ.,க்கு விண்ணப்பித்த, 1.73 லட்சம் மாணவர்களில், 92,731 மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். இவர்களில், மாணவர், 59,427 பேர்; மாணவியர், 33,304 பேர். இவர்களுக்கு, தமிழக அரசு, ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கும், கல்வி உதவித்தொகை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக