லேபிள்கள்

8.6.14

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
பி.எட். படிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்டு 14ந் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதே போன்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14ந் தேதிக்குள் திருப்பப்பெறப்படும். இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரிசென்னை, எஸ்.டி.இந்து கல்லூரிநாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரிவேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவிழுப்புரம் ஆகியவற்றில் வினியோகம் செய்யப்படுகின்றன.
மண்டலம், கல்விமையங்கள்
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரிகோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரிதர்மபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரிதிருச்சி மற்றும் கல்வி மையங்களான ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரிசென்னை, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரிசென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரிகோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரிதஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரிதிருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரிமசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரிராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரிமதுரை, பவானி கல்வியியல் கல்லூரிகடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ர்ன்.ஹஸ்ரீ.ண்ய் ன் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து 500 ரூபாய்க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, 550 ரூபாய்க்கான வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை15 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து, பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை600015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2015 ஜனவரியில் தொடக்கம்
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக