லேபிள்கள்

13.6.14

படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு

எழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும்
போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி, கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர். 'டி, பி' எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின் இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.

இதுதான் 'டிஸ்லெக்ஸியா' என்பதே, பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை.ஆசிரியர்கள் மாணவர்களின் நோட்டை திருத்துவதுடன் சரி. திரும்ப எடுத்துச் சொல்லாததால், அவர்களின் இக்குறைபாடு பிளஸ் 2, அதற்கு பின்னும் தொடர்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு டாக்டரிடம் 'டிஸ்லெக்ஸியா' சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் தரப்படுகிறது. சில மாணவர்களுக்கு மற்றவர்கள் எழுத 'ஸ்கிரைப்' அனுமதியும் வழங்கப்படுகிறது. உண்மையில் அறிவுத் திறன் குறைவான 'டிஸ்லெக்ஸியா' மாணவர்கள் மட்டுமின்றி, சாதாரண நிலையில் உள்ள மாணவர்களும், இதை தவறாக பயன்படுத்துகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத் தலைவர் குமணன், மருத்துவ உளவியலாளர் சுரேஷ் கூறியதாவது: உலகளவில் குழந்தைகளின் அறிவுத் திறன் வளர்ச்சி 90 முதல் 110க்குள் இருந்தால், சாதாரண குழந்தை. 70க்கு கீழே இருந்தால், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளது. 90 முதல் 110க்குள் இருந்தால், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரின் அறிவுத் திறன் வளர்ச்சி, ஆறாம் வகுப்பு மாணவரின் அளவு தான் இருக்கும். இதைத் தான் 'டிஸ்லெக்ஸியா' என்கிறோம். வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தால், 10 முதல் 20 சதவீதத்தினருக்கு இப்பிரச்னை இருக்கும். தமிழ், ஆங்கில எழுத்துக்களை தேவையின்றி சேர்ப்பது, தேவையான இடத்தில் பயன்படுத்தாமல் விடுவது போன்ற தடுமாற்றம் இருக்கும். வகுப்பறையில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் அத்தவறை கண்டு கொள்வதில்லை.

இதுதான் மாணவர்களின் தவறுகள் திருத்தப்படாமல் தொடர்வதற்கு காரணமாகிறது.பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும். உண்மையில் தவறை திருத்தமுடியாத மாணவர்களுக்கு, பிளஸ் 2 தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் அளிப்பது, 'ஸ்கிரைப்' முறையை பயன்படுத்தலாம். மற்ற மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பதைத் தொடர்ந்தால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு நீங்கும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக