லேபிள்கள்

14.6.14

'பாஸ் மார்க்' போட பணம் கேட்ட ஆசிரியர்கள்:சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட பெற்றோர்

அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 மறு தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்க, மாணவர்களிடம் ஆசிரியர்கள் பணம் கேட்டனர் என, சி.இ.ஓ.,வை முற்றுகையிட்ட, பெற்றோர், போராட்டத்தில்
ஈடுபட்டனர்.நாகை, தேசிய மேல்நிலைப் பள்ளியில், 1,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 1 தேர்வில், இப்பள்ளியைச் சேர்ந்த, 267 மாணவர்கள் தேர்வெழுதியதில், 210 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 5ம் தேதி மறுதேர்வு நடந்தது. மாணவர்களின் தேர்வுத் தாள்கள், பள்ளியிலேயே திருத்தப்பட்டன. இதில், 12 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; 32 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; மூன்று பேர் தேர்வு எழுதவில்லை.இந்நிலையில், தேர்ச்சியடையாத, 32 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், நாகை சி.இ.ஓ., அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள், சி.இ.ஓ., ராமகிருஷ்ணனிடம், 'தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, மூன்று ஆசிரியர்கள் மாணவர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் கேட்டு உள்ளனர். பணம் கொடுக்காத மாணவர்களை, தேர்ச்சி பெற வைக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்ற மறு தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கூறினர்.போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக