தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கருத்து கேட்டு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.
கடந்த கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒன்றியத்தில் ஆங்கில வழி வகுப்பு செயல்படுகிறது. தற்போதுள்ள ஆசிரியர்களே ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளை எடுக்கின்றனர்.ஒன்றியம் வாரியாக ஆங்கில வழி வகுப்புகளை துவங்க கோரி பள்ளிக்கல்வித்துறையை அரசுஅறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மெட்ரிக். பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து, குறைந்த மதிப்பெண், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும்மாணவர்களுக்காக மேல்நிலையிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவக்கலாமா என, அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாவட்டவாரியாக முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் கருத்துக்கேட்டு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "விருப்பம் கேட்டு கடிதம் வந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து, தேவை இருக்கும்பட்சத்தில், அதற்கான இடங்களை தேர்வு செய்து கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்புவோம்; அரசு பள்ளி ஆங்கில வழிக்கல்விக்கென கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் தான் இத்திட்டம் வெற்றிபெறவாய்ப்புஉள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக