லேபிள்கள்

14.6.14

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமது அரசின் சாதனைகளில் ஒன்றாக வருமான வரி வரம்பு உச்சவரம்பை அறிவிக்க மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வருமானவரி துறையிடம் இருந்து நிதித்துறை அறிக்கை பெற்றிருப்பதாக தெரிகிறது. வருமானவரி உச்சவரம்பை உயர்துவதோடு பல நிதிச்சலுகைகளும் அறிவிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வீட்டுக்கடன் மீதான வரிச்சலுகை வரம்பை உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதே போல மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பரிமியம் மீதான வரிச்சலுகை வரம்பும் உயர்த்தபட வாய்ப்புள்ளதாக நிதித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தமது அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டிலேயே அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் பலவும் இடம்பெற நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. 

வருமானவரி வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இதை அமல்படுத்த வேண்டும் என்பது நிதித்துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக