பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. 10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், இன்று,
பள்ளிகளில் வினியோகிக்கப்படுகிறது. பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று, மதிப்பெண் சான்றிதழை பெறலாம். மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழை வாங்கியதும், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும், சரியாக இருக்கிறதா என்பதை, உறுதி செய்துகொள்ள வேண்டும். பெயர், பதிவு எண், பள்ளியின் பெயர், பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் உள்ளிட்ட, அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். பிழை இருந்தால், உடனடியாக, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழில் ஏற்பட்ட பிழையை சரிசெய்து, புதிய மதிப்பெண் சான்றிதழ் தர, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக