2009 ஆம் ஆண்டு விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நடத்தப்பட்டது.
அதில் 36 மதிப்பெண் பெற்ற ஜோசப் என்பவருக்கு பணி வழங்காமல்வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி வழங்கியது ஆசிரியர்
தேர்வு வாரியம்.
இதை எதிர்த்து ஜோசப் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குபதிவு செய்தார்.
வழக்கு விசாரணையின் போது 5 மதிப்பெண் மட்டுமே பெற்றஓருவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று நீதிபதி கேள்விஎழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆசிரியர் தேர்வு வாரியம் பொதுப்பிரிவில்யாருமே இல்லை. அதனால் தான் 5 மதிப்பெண் பெற்ற வரை தேர்வுசெய்ததாக கூறியது.
ஆனால் இதை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதி நாகமுத்து அவர்கள்ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்ததுடன்,வழக்கு பதிவு செய்த ஜோசப் அவர்களுக்கு பணிநியமன ஆணைவழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
ஆதாரம்: சன் நியூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக