லேபிள்கள்

4.8.14

மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் அருகே,3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சிஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர்ஞாயிற்றுக்கிழமை
கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம்செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமைஇரவு உத்தரவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ்மனைவி முத்துலட்சுமி (43) தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், அந்த பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும்பெரியசாமி மகன் கோபியை (8), சரியாக படிக்கவில்லை என்றகாரணத்தால் கடந்த 1ம் தேதி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமிகுச்சியால் அடித்ததாக தெரிகிறது. இதனிடையே, சனிக்கிழமைவீட்டிலிருந்த கோபியின் உடலை அவனது பெற்றோர் பார்த்து, காயம்இருந்ததால் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

இதுகுறித்து, மாணவனின் தாய் ராஜேஸ்வரி பெரம்பலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் நாகவள்ளிவழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியைஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.


மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்எலிசபெத் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக