லேபிள்கள்

3.8.14

எங்களின் வாழ்க்கையோடு டி.ஆர்.பி. விளையாட வேண்டாம் -இனியும் தாமதிக்காமல், தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்.தேர்வாளர்கள் குமுறல்

டி.ஆர்.பி.சென்னைஅரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில்இதோஅதோ என்று டி.ஆர்.பி.தொடர்ந்துஏமாற்றி வருகிறதுஇதனால்ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும்,ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டுஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது.அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள்என்று இழுத்துக்கொண்டு சென்றதால்அரசுப் பள்ளிகளுக்கானஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல்நிலவியது.
மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.இதனிடையேபுதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம்செய்யும்படிதேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில்,உயர்நீதிமன்றம்அரசுக்கு உத்தரவிட்டதுஅதன்படிபுதியவெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில்,புதிய வெயிட்டேஜ் முறைப்படிதேர்வெழுதியவர்கள்ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRBஇணையதளத்தில் வெளியிடப்பட்டனஅதனையடுத்துஅதில்பிழைகள் இருந்தால் சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள்வழங்கப்பட்டுஜுலை 30ம் தேதிதேர்வு செய்யப்பட்டுள்ளஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என்று TRB தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

பின்னர்ஜுலை 30ம் தேதி இல்லையெனில், 31ம் தேதியாவதுமுடிவுகள் வெளியாகும்எப்படியாவதுஆகஸ்ட் 1ம் தேதிக்குள்முடிவுகள் வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டதுஆனால், TRBஇணையதளத்தின் முன்தேர்வர்கள் தவமாய் தவம் கிடந்ததுதான்மிச்சம்முடிவுகள் வெளியிடப்படவில்லைஇதனால்பொறுமையின்எல்லைக்கே சென்றனர் தேர்வர்கள்.

ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து செய்தித்தாள்களிலும் இவ்வாறுசெய்திகள் வெளிவந்தன. "தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிஆசிரியர்கள் 11,226 பேர் உட்படதேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் 4,000 பேர் அடங்கிய பட்டியலையும் சேர்த்துமொத்தம்15,226 பேருக்கான இறுதி பட்டியல்ஆகஸ்ட் 1ம் தேதி காலையோஅல்லது பிற்பகலிலோ வெளியிடப்பட்டு விடும்என்பதுதான் அந்தசெய்தி.
அவற்றைப் படித்த தேர்வர்கள்மீண்டும் மகிழ்ச்சியும்பரபரப்பும்அடைந்தனர்ஆனால்அன்றும்முழுநாள் தவம் கிடந்ததுதான்மிச்சம்முடிவுகள் வெளியாகவில்லைடி.ஆர்.பிஎன்னதான் சொல்லவருகிறதுஎன்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகிறது...
தேர்வர்கள் சிலர் கூறியதாவதுபி.எட்., முடித்து 10 ஆண்டுகள் ஏன்,அதற்கும் மேலாக 20 ஆண்டுகளை கழித்தவர்கள் எல்லாம் உள்ளனர்.இவர்களில்சாதி ஒதுக்கீடுகலப்புத் திருமணம்ராணுவ வீரர்பிள்ளைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய பல்வேறு சலுகைகள், TETதேர்வுமுறை கொண்டு வரப்படும் முன்னதாகபிராந்திய மற்றும் DPIஅளவில் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் என்று பல்வேறுமுன்னுரிமை சலுகைப் பெற்றவர்கள்தங்களுக்கு அரசு வேலைகிடைக்காதாஎன மிகப்பெரிய ஏக்கத்தில் நாட்களை நகர்த்திக்கொண்டுள்ளனர்.

புதிய பட்டதாரிகளின் மேல் ஏன் இவ்வளவு அக்கறை?
கடந்தாண்டு அல்லது இந்தாண்டு பி.எட்., படிப்பை முடித்தவர்களுக்குபெரிதாக எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லைஅவர்கள்ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவுமில்லைகடந்த 2012ம் ஆண்டு,அதே ஆண்டில் பி.எட்., முடித்த பலர், TET தேர்வையெழுதிஎந்தவிதஅனுபவமோஅறிமுகமோ இல்லாமல்தகுதியான ஆசிரியர்கள்என்ற போர்வையில்உடனடி பணி வாய்ப்புகளைப் பெற்றனர்.

மேலும், 2013ம் ஆண்டிலும்உடனடியாக TET தேர்வை நடத்தாமல்,புதிதாக படித்துவரும் பி.எட்., பட்டதாரிகளும் தேர்வையெழுதவேண்டும் என்றுபல்லாண்டுகளாக பி.எட்., முடித்துகாத்திருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல்ஆகஸ்ட் மாதம்தேர்வை நடத்தியது டி.ஆர்.பிஇதனால்அந்த கல்வியாண்டில்வேறுமேற்படிப்புகள் எதிலேனும் சேரலாம் என்று நினைத்தவர்களின்பிழைப்பில் மண் விழுந்தது.

எனவேஅனைத்துவித தகுதிகளையும்ஏன்தேவைக்கும் அதிகமானதகுதிகளைப் பெற்றிருந்தும்பல்லாண்டுகளாக அரசுப் பணிகளுக்குஏங்கி நிற்கும் நபர்களை மனதில் வைத்துஇனியும் தாமதிக்காமல்,தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்தேவையின்றிஎங்களின்வாழ்க்கையோடு டி.ஆர்.பிவிளையாட வேண்டாம் என அவர்கள்ஆவேசமாய் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக