பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரம் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக