நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்தவர் வையணன், இவர் ராமநாதபுரம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல் இவர் தனக்கு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்படும் காலி இடங்களில் கலந்தாய்வின் போது இடமாறுதல் கோரி விண்ணப்பித்து வந்தார்.
ஆனால் காலிஇடங்கள் மறைக்கப்பட்டதால் தனக்கு மாறுதல்கிடைக்கவில்லை என கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அடுத்து ஏற்படும் காலிஇடத்தில் ஆசிரியர் வையணணுக்கு இடமாறுதல் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த கலந்தாய்விலும் இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட காலி இடத்தில் இடமாறுதல் வழங்கவில்லை. இதை அடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் முறையிட்டார்.
கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி நடந்த கலந்தாய்விலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடமாறுதல் வழங்கவில்லை. அன்றைய கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு இடமும் பகிரங்கமாக மறைக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர் வையண்ணன் குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அதே நீதி மன்றத்தில் தொடர்ந்தார்.இதில் மறைக்கப்பட்ட 3 இடங்களையும் நிரப்ப நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது.மேலும் கல்வித்துறை விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதை அடுத்து பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கல்வித்துறை திடீரென ஆசிரியர் வையணனுக்கு ராமநாதபுரத்தில் இருந்து அவர் விரும்பியபடி திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்ற இடமாறுதல் உத்தரவை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு கடித பார்வையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. வையணன் உடனடியாக திருச்செந்தூர் பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக