பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள்முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில்,இடைநிலை ஆசிரியர் பணிக்கான,'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்டபணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்புஉள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாதஇறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக