லேபிள்கள்

6.8.14

பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

அனை த்து வகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளி வளாகங்களை கலர் காகிதங்கள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். சுதந்திர தினமான 15ம் தேதி காலை, அனை த்து வகை பள்ளிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் வகை யில் கண்காட்சி, நாடகம் நடத்த வேண்டும். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்.

சுதந்திர தினா விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்களை கொண்டு மரக் கன்றுகள் நட வேண்டும். அத்துடன் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவற்றின் பெருமைகளை விளக்க வேண்டும்.


சுதந்திர தின விழா கொண்டாட குழு அமைத்து, விழா முடிந்த பிறகு அது தொடர்பாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக