அரசு ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு முன், சம்மந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் தான்; இது தொடர்பான சட்டப்பிரிவு செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மன்சூர் அலி கான் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அரசு ஊழியர்கள் மீதான, லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு முன், அவர்கள் பணியாற்றும் சம்மந்தபட்ட துறைகளின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய நடைமுறை உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின், 19வது பிரிவு, இதை உறுதி செய்கிறது. எனவே, ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களை பாதுகாக்கும் இந்த சட்டம், சட்ட விரோதமானது. இதை செல்லாது என, அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி, டி.எஸ்.தாகூர் தலைமையிலான,'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களை தண்டிக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பொய் புகாரில், எந்த ஒரு நேர்மையான அதிகாரியும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. இதை, சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். எனவே, அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, சம்மந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறுவது சரியான நடைமுறை தான். அதற்கான, ஊழல் தடுப்பு சட்டத்தின், 19வது பிரிவு, சட்டபூர்வமானதே. இவ்வாறு, நீதிபதிகள் உத்தர
விட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக