தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணி
புரிகின்றனர்.
பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக