லேபிள்கள்

7.8.14

பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சியா : ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கு வாய்ப்பு

பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் அறிவிப்பு:

அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், 1,500 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 9,000 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 உடனடி தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, துணை கலந்தாய்வு அறிவிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், 7ம் தேதி (இன்று) முதல், 14ம் தேதி மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். 16ம் தேதி, 'ஆன்லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தப்படும்.
மாணவர்கள், விண்ணப்பித்த இடத்தில் பங்கேற்று, விரும்பிய ஆசிரியர் பயிற்சி பள்ளியை தேர்வு செய்யலாம். இவ்வாறு, கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக