திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கல்வி ஒன்றியத்தில் பிளாக்-1ல் முத்துக்கிருஷ்ணன், பிளாக்-2ல் பர்வீன் ஆகிய இருவரும் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். மத்திய அரசு சார்பில், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும். இந்த பணம் அந்தந்த கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகள் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும். அதன்படி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை ரூ.5 லட்சம் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரி முத்துக்கிருஷ்ணன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இப்பணத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அவர் கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.
தவிர, ஆசிரியர்கள் சம்பளத்திலிருந்து தபால் அலுவலகத்தில் செலுத்தப்படும் ஆர்டி தொகை ரூ.2.50 லட்சத்தையும் அவர் கையாடல் செய்ததாக கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணையில், தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன், ஏஇஇஓ முத்துக்கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக தொட்டியம் ஏஇஇஓ புளோரா ஆரோக்கியமேரி நியமிக்கப்பட்டு, அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக