லேபிள்கள்

6.8.14

சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஒரே வகையான கல்வி என்ற அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2011 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதனால் மெட்ரிக் கல்விமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகள் தங்களை வேறுபடுத்தி காட்ட மெட்ரிக் என்ற வார்த்தையை பள்ளிகளின் பெயரில் பயன்படுத்தி வந்தன.
சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின் அரசுப்பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும், 95 சதவீத தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியிலும் பாடத்திட்டம் உள்ளது.
தனியார் பள்ளிகள் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தங்களை இணைத்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் இப்பள்ளிகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. மேலும் ஏராளமான பள்ளிகள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. ஏற்கனவே உள்ள பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்து வரும் நிலையில் புதிதாக துவக்கப்படும் தனியார் பள்ளிகளும் இப்பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், �பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பதையே அதிகமாக விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது� என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக