மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும், மத்திய டிரஸ்டிகளின் போர்டு கூட்டம், இன்று, டில்லியில்
நடக்கிறது. இதில், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக மாற்றுவது குறித்து, முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, 6,500 ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர் மட்டுமே, பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்ற நிலை உள்ளது. இனி, 15 ஆயிரம் ரூபாய் வரை, அடிப்படை சம்பளம் பெறுவோர், பயன்பெறும் வகையில், இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பெறும் ஓய்வூதிய தொகை, குறைந்தபட்சம், 1,000 ரூபாயாக நிர்ணயிப்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்மூலம், 28 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக