லேபிள்கள்

7.2.14

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப் - 2 தேர்வு

: "உதவியாளர், குமாஸ்தா உள்ளிட்ட பணிகளில், காலியாக உள்ள, 2,269 இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும்' என, அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்' என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012 - 13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள்www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச், 5 வரை விண்ணப்பிக்கலாம். வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.
Click Here


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக