வருமான வரித் துறையின், 'பான்கார்டு' பெறுவதற்கான, புதிய நடைமுறை நாளை முதல் அமலாக இருந்த நிலையில், அதை நிறுத்தி
வைப்பதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சி.பீ.டீ.டி., அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிப்., 3 முதல் 'பான்கார்டு'க்கு விண்ணப்பிப்போர், அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றுகளின் நகல்களை சரிபார்க்க, அவற்றின் அசல் ஆவணங்களையும் அலுவலரிடம் காட்ட வேண்டும் என, தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், சி.பீ.டீ.டி., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பான்கார்டு' பெறுவதற்கு புதிய நடைமுறையை அமல்படுத்துவது குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, பழைய நடைமுறையே தொடரும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு, மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக