பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, இந்த ஆண்டு, முன்கூட்டியே துவக்கி முடிக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது. "நாடு
முழுவதும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்பு, ஆக., 1ல் துவங்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதை, கடந்த ஆண்டு, தமிழக அரசும் கடைபிடித்தது. இதற்காக, கடந்த ஆண்டு, மே, 4 முதல், 20 வரை, விண்ணப்பம் வழங்கிய அண்ணா பல்கலை, ஜூன் இறுதியில் கவுன்சிலிங்கை துவக்கி, ஜூலை இறுதி வரை நடத்தியது. ஆக., 1ல், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க வேண்டும் என்பதால், மிகவும் நெருக்கடியான நிலையில், பணி செய்ய வேண்டிய நிலை, அண்ணா பல்கலைக்கு ஏற்படுகிறது. மாணவர்களுக்கும், கவுன்சிலிங் முடிந்து, கல்லூரியில் சேர, தேவையான ஏற்பாடுகளைச் செய்யகூட, கால அவகாசம் இருப்பது இல்லை. இதை தவிர்க்க, இந்த ஆண்டு, முன்கூட்டியே கவுன்சிலிங்கை நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, பல்கலை வட்டாரம் கூறுகையில், "பிளஸ் 2 தேர்வு முடிவு, 10 நாள் முன்னதாக வந்தால் கூட போதும். கவுன்சிலிங்கை, முன்கூட்டியே துவக்கி, விரைவாக முடித்து விடுவோம்' என, தெரிவித்தன. கடந்த ஆண்டு, மே, 9ல், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு, ஒரு வாரம் முன்னதாக தேர்வு முடிவு வெளியானால், அதற்கு தகுந்தாற்போல், பி.இ., கவுன்சிலிங்கும், ஜூலை, 20 தேதிக்குள் முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், "முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடுவதைப்பற்றி, தற்போதைய நிலையில், எதுவும் கூற முடியாது' என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக