லேபிள்கள்

2.2.14

ஆட்டோ கட்டணம் திடீர் ரத்து மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்

தமிழகத்தில் பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க மாநிலம் முழுவதும் 400 பகல் நேர பாதுகாப்பு மையங்கள்
இயங்கி வருகின்றனகுழந்தைகளுக்கு மாதந்தோறும் பிஸ்கட், பால் உள்பட உணவு செலவுக்கு ரூ.7 ஆயிரம், மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர ஆட்டோ கட்டணம் ஸீ4500 என ஒவ்வொரு மையத்திற்கும் ஸீ11,500 வழங்கப்பட்டு வந்தது. ஆட்டோவில் வீடுகளுக்கு நேரில் வந்து மாற்றுத்திறன் குழந்தைகளை, பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதனால், குழந்தைகளை மையங்களுக்கு அனுப்பி ஏழை பெற்றோர்கள் வேலைக்கு சென்று வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மாற்றத்திறன் குழந்தைகளின் உணவுக்கு வழங்கப்பட்ட தனி நிதி நிறுத்தப்பட்டது. அந்த குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். மாற்றுத்திறன் குழந்தைகளை வீட்டில் இருந்த மையங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்படுவதற்கு தற்போது வேட்டு வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட் டத்தில் ஆட்டோ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக