லேபிள்கள்

8.2.14

தேர்வு நடப்பதற்கு முன்னரே கீ ஆன்சர் வெளியீடு -அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியதேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம்
தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடத்திய பொறியியல் பணிகளுக்கான தேர்வின்விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பொறியியல் பணி தேர்வு விடைகளுக்குப் பதிலாக, நடைபெறவிருந்த மற்றொரு தேர்வின் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்டபிரிவின் துணைச் செயலாளர் மற்றும் பிரிவு அலுவலர் ஆகிய இருவரும்வெள்ளிக்கிழமை இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக