மாநிலம் முழுவதும் வரும்
கல்வியாண்டில் புதிதாக துவங்கவேண்டிய ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்தவேண்டிய
பள்ளிகளின் விபரங்களை உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர்
ஒவ்வொரு ஆண்டும், அனைவருக்கும்
கல்வி இயக்க திட்டத்தின் மூலம் புதிய பள்ளிகள் துவக்கப்படுவதுடன், ஆரம்ப
பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். வரும் கல்வியாண்டில், தரம்
உயர்த்தவேண்டிய பள்ளிகள் சார்ந்த தகவல் சேகரிப்பு பணிகள் மாநிலம் முழுவதும்
துவங்கியுள்ளது.
பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை, இடவசதி, வகுப்பறைகள்
எண்ணிக்கை, மைதான வசதி, ஆசிரியர்கள்
எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து தகுதியான பள்ளிகள் பட்டியல் தேர்வு
செய்யப்படவுள்ளது.
கோவை மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''தரம்
உயர்த்தப்பபடவேண்டிய பள்ளி
களாக பள்ளிகளின் பெயர் பட்டியல்
தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிதாக துவங்கவேண்டிய தொடக்க
பள்ளிகள் சார்ந்த பணிகள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நடந்து வருகிறது.
ஓரிரு நாட்களில், இதுசார்ந்த பட்டியல் தொடக்க
கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக