லேபிள்கள்

16.4.14

18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.

நாமக்கல் மாவட்டத்தில் 16 வது இந்தியப் பொதுத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற 18.04.2014 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
18.04.2014 அன்று கிறித்துவ பெருமக்களின் "புனித வெள்ளி" திருநாளாகும். இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் தேர்தல்பணி பெற்றுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். அன்று முழு நேர தேர்தல் வகுப்புகள் நடத்துவது என்பது அப்பண்டிகையின் நோக்கத்தையும் உற்சாகத்தையும் குலைப்பது போன்றதாகும். 

எனவே 18.04.2014 அன்றைய இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்புகளை பிறிதொரு நாளில் நடத்திடக் கோரி 15.04.2014 அன்று மாலை  
ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் மதிப்புமிகு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவினை கனிவுடன் பரிசீலித்த ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்கப் பொறுப்பாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக