லோக்சபா தேர்தல் நடைபெறுவதால், கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கல்வி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டத்தை, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம், ஒன்பது லட்சம் மாணவ, மாணவியருக்கு, 2,600 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. 'இத்திட்டத்தை, லோக்சபா தேர்தல் முடிந்ததும் அமல்படுத்த வேண் டும். அதுவரை, இத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை, இத்திட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது' என, மத்திய நிதி அமைச்சகத்தை தேர்தல் கமிஷன் கேட்டு கொண்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக