இவ்வாண்டு ஜூன்.2013 மாதத்தில் 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதாலும்,தேர்தல் வகுப்புகள் தேர்தல்பணிக்காக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 220 வேலைநாள் என்ற இலக்கு குறைவுபடுவதாகவும் அதற்காக பல இடங்களில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் பள்ளி 220 வேலைநாட்கள் வரும் வரை மே மாதத்த்தில் 1 அல்லது 2 நாட்கள் பள்ளி திறக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவ்வாண்டு 3 நாட்கள் CRC பயிற்சிநாட்கள் மற்றும் 3 நாட்கள் BRC அளவிலான பயிற்சி நாட்களில் 40% சதவீத ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் என்றும் அதற்கு ஈடாக 3 பள்ளி வேலை நாட்கள் தவிர்ப்பு (217+3=220) என ஆணை வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குனரிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகளால் கோரப்பட்டது.
கடந்த காலத்தில் 10 பயிற்சி நாட்கள் வேலை நாட்களாக் அறிவிக்கப்பட்டிருந்த்ததை நினை வு கூறப்பட்டது
அதற்கு இயக்குனர் ஏப்ரல்-30என்பதே தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கடைசி வேலைநாள். அன்று வரை பள்ளிகள் நடத்தினால் போதுமானது.
யாரும் அதற்குபிறகு பள்ளிகள் நடத்தக்கூடாது. 220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவ்வாறு கட்டயப்படுத்தப்பட்டால் தனக்கு தகவல் தெரிவிக்கவும் எனவும், இது குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார் எனவே ஒன்றிரண்டு நாட்கள் குறைவாக இருந்தாலும் ஏப்ரல்-30 அன்றுடன் பள்ளிசெயல்பட்டால் போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக