லேபிள்கள்

16.4.14

ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை, உச்சரிப்பு என ஒவ்வொன்றும் மாணவர்களை பாதிக்கக் கூடியவை. வீட்டில் என்ன பிரச்னையாக இருந்தாலும், வகுப்பறைக்கு வெளியிலேயே வைத்துவிட்டு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியோடு பாடங்களைக் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து மாணவர்களது அறிவுக் கூர்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை கற்றுத்தர வேண்டும்.
சில ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களிடம் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள். சில ஆசிரியர்கள் எப்போதும் எரிந்து விழுவார்கள். இதையெல்லாம் கட்டாயம் விட்டொழிக்க வேண்டும்.

தனக்குத் தெரிந்தது போதும் என்று இருக்காமல், பல தரப்பட்ட பயிற்சிகளை வகுப்பறையில் அளிப்பவராக, தன்னை மேலும் மேலும் பட்டைதீட்டிக் கொள்பவராக இருக்கவேண்டும்.

'இன்றைய வகுப்பு வெற்றிகரமாக இருந்ததா? எனது மாணவர்கள் கற்றது என்ன? வகுப்பு நேரத்தை உபயோகமாக செலவழித்தேனா?' என்பது போன்ற கேள்விகளை, ஆசிரியர்கள் தினம்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். இதில் அவருக்கு திருப்தியான பதிலை, அவரே கண்டால்தான், பணியைச் செவ்வனே செய்ததாக அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக