வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை கண்டிப்பாக அழுத்த வேண்டும்’’ என்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி
உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை : வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தவில்லை என்று கடந்த தேர்தல்களின்போது புகார்கள் வந்தன. குளோஸ் பட்டனை அழுத்தாமல் விட்டுவிட்டால், மோசடி நடக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்தவுடன், அந்த வாக்கு இயந்திரத்தில் உள்ள குளோஸ் பட்டனை வாக்குச் சாவடி அதிகாரி அழுத்த வேண்டும். அதன்பின்னர், கடைசியாக வாக்களித்தவரின் வரிசை எண்ணுக்கு கீழே, ஒரு கோடு வரையவேண்டும். இந்த நடைமுறை அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் நடைபெற வேண்டும். மேலும், வாக்கு பதிவு முடிந்தவுடன், எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற அத்தாட்சி நகலை வாக்குச்சாவடி அதிகாரிகள், அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்டுகளுக்கும் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக