ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், இம்மாதம் 26ல், சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் துவங்கும் என, தெரிகிறது. இதில், சிறுவர்களுக்கான பல கலை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின், ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்திலும், சிறுவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படும்.
இதில், பரத நாட்டியம், பாட்டு, வயலின், கராத்தே, யோகா உள்ளிட்ட பல கலைகள் கற்றுத் தரப்படும். சென்னை, மயிலாப்பூர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் உள்ள, ஜவஹர் சிறுவர் மன்றத்தில் பயிற்சி முகாம் நடத்தப்படும். இதில், 8 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த ஆண்டின் பயிற்சி, இம்மாதம் 26ல் துவங்கும் என தெரிகிறது. இருப்பினும், அரசு தரப்பிலிருந்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக