லேபிள்கள்

18.4.14

ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ்: முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் 2014-2015ம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக இலவச பஸ் பாஸ் மற்றும் பஸ் பாஸ் ரெனிவல் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று ரெனிவல் செய்ய வேண்டும்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான தேவை பட்டியலை உரிய போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலருக்கு உடனடியாக அனுப்பி இலவச பஸ் பாஸ்களை வரும் ஜீன் மாதம் பள்ளி திறக்கும் அன்றே வழங்கப்பட வேண்டும்.
மண்டல போக்குவரத்து கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையை முதன்மைக்கல்வி அலுவலக "ஆ 5" பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும், என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக