லேபிள்கள்

15.4.14

தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ......நேற்று பட்ட துயரம் ....விடுமுறை நாளில் அவர்கள் அடைந்த துயர் கொஞ்சம் நஞ்சம் அல்ல......

நேற்று (13.4.14) வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது ......அதில் பல ஆசிரியர்களுக்கு 150 கிலோமீட்டர் தூரத்துக்குமேல்  பயணித்து இரண்டாம் கட்ட பயிற்சிக்கு செல்ல நேரிட்டது இதில் பல இடங்களில் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் அதாவது குடிநீர் .....கழிப்பறை வசதி ....ஆகியவை சரியாக செய்யப்படவில்லை ....பல ஆசிரியர்கள் விடியர்க் காலையே பயற்சிக்கு சென்றதால் இருக்கும் இடத்தில் ஏதாவது உணவை சாப்பிடலாம் என்று சென்ற ஆசிரியர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை
மற்றும் கழிப்பறைக்கு வெளியில் சென்ற ஆசிரியர்கள் திரும்பும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காணப்பட்டது .....கேட் பூட்டப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் வெளியில் சென்று திரும்பியதற்கு  கையொப்பமிட்டு உள்ளே செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டது ......பிறகு திருவன்ணமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள  ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளானர்
காரணம் திருவண்ணாமலை ௌர்ணமிகி ரிவலம் செல்லும் பக்தர்கள் வேறு  நேற்று அணைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்ததால்......... குறிப்பாக பெண்  ஆசிரியர்கள் பலர்   வீடுதிரும்புவதற்குள் பெரும் அவதிக்கு உள்ளானதாக பலர் நமக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ......................இதை சரி செய்ய தேர்தல் ஆணையம்  ஆசிரியர்களுக்கு அவர்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்துக்கே  சிறப்பு பேருந்து மற்றும் பயிற்சி நடைபெறும் இடத்தில் அவர்களுக்கு சுகாதாரமான தற்காலிக கேண்டின்கள் மற்றும் கழிப்பறை வசதி ஆண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் என போதுமான அளவில் ......இவை அணைத்தும் செய்து கொடுத்தால் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தங்களது ஜனநாயக கடமையினை சீரும் சிறப்புமாக செய்து முடிப்பர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக