லேபிள்கள்

18.4.14

விடுமுறை நாளில் பயிற்சி வகுப்பு தேர்தல் பணி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வாக்குசாவடி அலுவலர்களுக்கான  முழுமையான பயிற்சியை அளித்திட தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தனி தொகுதிக்குட்பட்ட திண்டிவனம், ஆரணி தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் திண்டிவனத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் நடந்தது.

கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இரண்டு பயிற்சிகள் முடிந்துள்ளது. மூன்றாம் பயிற்சி வகுப்பு 20ம் தேதி அறிவிக்கப்பட்டது.  ஆனால் 20ம் தேதி ஞாயிற்று கிழமையில் வகுப்பில் கலந்து கொள்ள முடியாது. ஏற்கனவே எடுத்த வகுப்புகளே போதுமானது என ஆசிரியர்கள் தெரிவித்து வகுப்புகளை விட்டு வேகமாக வெளியேறினர்.

 அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன், ஆசிரியர்கள் முழுமையாக பயிற்சி பெறவே 20ம் தேதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  அவரின் இந்த பதிலை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு செல்லாலாம் என அவர் தெரிவித்தார்.

 இதனை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனைவரும் அமைதியாக வகுப்புகளுக்கு சென்றனர். இரண்டு தொகுதிக்காண வாக்கு சாவடி அலுவலர்கள் திடீர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சங்கராபுரத்தில் சாலை மறியல்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்ளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது 20ம் தேதி மீண்டும் வகுப்புக்கு வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று கிறிஸ்தவர்களுக்கு பண்டிகை உள்ளதால், வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. திடீரென 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தேர்தல் உதவி அலுவலர் தினகர்சாம்சங்பாபு, வட்டாட்சியர் மணிவண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்று ஆசிரியர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களும் திடீர் போராட்டம் நடத்தினர்.  வரும் 20ந்தேதி கிறிஸ்தவர்களுக்கு பண்டிகை உள்ளதால் தேதி மாற்றம் செய்ய வேண்டுமென கூறி பயிற்சி வகுப்பினை புறக்கணித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக