பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராகி உள்ளது. அதற்கான அரசு அனுமதி வந்த உடன் பாடம் எழுதப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது.
அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தம் தயாரித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்களால் தரமாக தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் பாடம் எழுதப்படும். பின்னர் புத்தகம் அச்சடிக்கப்படும்.
2015-2016-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கும் 2016-2017-ம் ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக