லேபிள்கள்

15.4.14

ஆசிரியைகளுக்கு அருகில் உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர் - ஆசிரியைகளுக்கு குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பணியாற்ற உத்தரவிடப்படும் எனத் தெரிகிறது.
அதற்கு முன்னோட்டமாக தேர்தல் பணிகள் பற்றிய 2-ம் கட்ட பயிற்சிகளை 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள ஒன்றியங்களில் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நாகை  மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு  மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.தேர்தல் பணியாற்றும் ஆசிரியைகள் எளிதில் சென்றுவரும் வகையில் 20 கிலோமீட்டருக்குள் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போது 50 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனை மாற்றி பெண் ஆசிரியைகளுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பயிற்சி வகுப்பும், பணியும் வழங்க ஆட்சியர் ஆவன செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக