திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி கல்வி மாவட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் சிவசண்முகம். இவர் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசு பழைய பாட புத்தகத்தை தன்னிச்சையாக எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடோனில் இருந்து வெளியிடங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்த இளநிலை உதவியாளர் சிவசண்முகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி கூறியதாவது:–
கடந்த 2005–06–ம் கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கியது போக எஞ்சிய புத்தகங்கள் பழனி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த புத்தகங்கள் அனைத்தும் அரசு செய்தித்தாள் நிறுவனமான டி.என்.பி.எல்.–க்கு செல்லவேண்டியவை.
இதனை இளநிலை உதவியாளர் தன்னிச்சையாக முடிவு செய்து சுமார் 2000 புத்தகங்களை தனியாருக்கு விற்பனை செய்து உள்ளார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக