10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுக்காக மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு மேற்படிப்பில் என்ன படிக்கலாம், என்ன குரூப் தேர்வு செய்யலாம், எந்த படிப்பு படித்தால் எதிர்காலத்தில் என்னென்ன பதவிக்கு செல்லலாம், என்ன வேலை கிடைக்கும் போன்றவற்றை ஒவ் வொரு துறைக்கும் உள்ள நிபுணர்களை கொண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு வழங்க அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை முதல் முறையாக ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், மாணவர்களின் வருங்கால கல்வி சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் நிகழ்ச்சியை அனைத்து மாவட்டத்திலும் நடத்த வேண்டும். பெரிய பள்ளியாக இருந்தால் அந்த பள்ளியிலேயே நடத்தலாம். அல்லது மாவட்டத்தில் 2 அல்லது 3 இடங்களில் நடத்தி அனைத்து மாணவர்களையும் அங்கு வரவழைக்கலாம். இந்த நிகழ்ச்சியை கோடை விடுமுறை நாட்களில் நடத்தி கல்வி ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக