மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை பராமரிக்க 2,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 160 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு சுற்றுச்சூழல் பராமரிப்பு, மரக்கன்றுகள் நட்டல் மற்றும் பராமரிப்பு, தோட்டங்கள் அமைத்தல், தண்ணீர் வசதி செய்தல், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தலா 500 ரூபாய் "கைபிடி" செலவு ஆகியவற்றிக்கு ஆண்டுதோறும் தலா 2,500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டிற்கு இந்நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏப். 21ல், மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் வாரியாக நடக்கும், தலைமையாசிரியர்கள் கூட்டங்களில், சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளித் தலைமையாசிரியர்கள், அந்த நிதியை காசோலையாக பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக