கல்விக்கட்டண விபரங்களை தனி யார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆயக்குடி இல வசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மையத்தின் இயக்குநர் ராமமூர்த்தி அறி க்கை: நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க் கையை தனியார் பள்ளிகள் துவக்கியுள்ளன. பள்ளிக் கட்டணங்களை ஒரே தவணையாகவும், சில பள்ளி கள் இரண்டு, மூன்று தவணைகளாகவும் செலுத்த அனுமதிக்கின்றன.
ஆனால் இந்த கட்டணங்களை கல்வி இறுதியா ண்டு வரை செலுத்த வாய்ப்பளிக்கவேண்டும். மேலும் இதுகுறித்த பட்டியலை அறிவிப்புப் பலகையிலும் குறிப்பிட வேண்டும். கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக