தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும், சிறுவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம், 26ம் தேதி துவங்கி உள்ளது. ஆனால், பயிற்சி முகாம் குறித்து, அரசு எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யோகா, கராத்தே, பரதம் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும், ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், ஆண்டுதோறும், சிறுவர்களுக்கான கோடைக் கால பயிற்சி முகாம் நடத்தப்படும். இதில், கராத்தே, யோகா, தியானம், கரகம், பரதம் உள்ளிட்ட கலை பயிற்சிகள் அளிக்கப்படும். ஐந்து முதல், 14 வயது வரை உள்ள சிறுவர்கள், பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் சிறுவர், அந்தந்த பகுதிகளில் உள்ள, ஜவஹர் சிறுவர் மன்ற அதிகாரிகளை, நாடுவர். அதனால், ஒவ்வொரு கோடைக் காலத்திலும், ஜவஹர் சிறுவர் மன்ற அலுவலகங்கள் சுறுசுறுப்பாக காணப்படும். தனியார் நிறுவனங்கள் நடத்தும் கோடைக் கால பயிற்சி முகாம்களுக்கு, அதிக கட்டணம் செலுத்த வேண்டும்; எனவே, அரசு நடத்தும், கோடைக் கால பயிற்சியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் விரும்புவர். இப்பயிற்சி முகாம், இந்த ஆண்டு, ஏப்., 26ல் துவங்கியுள்ளது. ஆனால், பயிற்சி முகாம் நடப்பது குறித்த, எந்த தகவலையும் பொதுமக்களிடம் அரசு தெரிவிக்கவில்லை.
விதிமுறைகள் : இதுகுறித்து, ஜவஹர் சிறுவர் மன்ற அதிகாரிகள் கூறுகையில், "லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தகவல் அளிக்கவில்லை' என்றனர். "வழக்கமாக நடக்கும் பணிகள், நடத்தை விதிமுறைகளால் பாதிக்கப்படாது' என, தேர்தல் கமிஷன் பலமுறை விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இதே காரணத்தை கூறியே, ஜவகர் சிறுவர் மன்றம், பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது, பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், 044- 2819 2152, 2819 3195, 2819 2748 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக