லேபிள்கள்

2.5.14

கல்வி நிலையத்தின் அருகே சிகரெட், புகையிலை பொருட்கள் விற்க தடை

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எந்த ஒரு கல்வி நிலையத்தின் சுற்று சுவரில் இருந்து 100 மீ. சுற்றுளவுக்குள் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்கள் விற்ககூடாது. அதுபோல தங்கள் கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் புகைப் பிடிப்பதற்கு ஏதுவாக நெருப்பு கொண்ட கயிறு, லைட்டர் போன்றவற்றை கட்டி தொங்க விடக்கூடாது எனவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி, : கல்லூரி அருகே 100 மீ. சுற்றுளவுக் குள் சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா உள் ளிட்ட புகை யிலை பொருட்களை விற்க தடை செய்யப்பட்டுள்ள தாக நகர் நல அலுவ லர் எச் சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்குப்பட்ட தனியார் கல்லூரிகளில் இருந்து 100 மீட் டர் சுற்றுளவுக்குள் சிக ரெட், பீடி, தடை செய்யப்பட்ட புகையிலான பான் பராக், குட்கா ஹான்ஸ் போன்றவை விற்கப்படு வதை நிறுத்த பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர் ந்து, திருச்சி நகர்நல அலு வலர் மாரியப்பன், பொன் மலை சுகாதார ஆய்வாளர்கள் அருண், பாண்டியராஜன், பொன் தலைவிரிச்சான் ஆகியோர் மாந கரில் உள்ள கல்லூரிகள் அருகே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், கல் லூரி அருகே உள்ள 15க் கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. அந்தந்த கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியதோடு, ரூ.70ஆயி ரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட தோடு பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கல்வி நிலையத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றுளவுக்குள் சிகரெட், பீடி, போன்ற சுவைக்கும் புகையிலான பான்பராக், ஹான்ஸ் பொருட்கள் விற்க கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட சுவைக்கும் புகை யிலை பொருட்களை எந்த வொரு கடையிலும், வணிக வளாகங்களிலும் விற்பனை செய்தல் கூடாது. 


இவற்றை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக