சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவசமாக சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகிப்பட்டு வருகின்றன.
சிறுபான்மை அனுமதி பெற்ற பள்ளிகளை தவிர அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் மே 3 முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவசமாக சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர், பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், துப்புரவு பணியாளரின் குழந்தைகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாமென மாவட்ட கல்வி துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக